26 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் நிதி மையமான ஷங்காயில், மேலும் 11 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், கொவிட் முடக்கநிலை ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் படி, சீனா வியாழக்கிழமை உள்நாட்டில் 2,119 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 1,931 ஷங்காயில் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஷங்காய் 17,629 புதிய தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தையதை விட 4.7 சதவீதம் குறைவு.
நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மார்ச் 1ஆம் திகதி முதல் நகரின் ஒட்டுமொத்த தொற்றுகள் 443,500ஆக உள்ளது.
தற்போதைய தொற்றுப்பரவலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36ஆக உள்ளது.