நாடளாவிய ரீதியில் நாளை (திங்கிட்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
எரிபொருள் விலையேற்றம், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் 30 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு ஆசிரியர் சமூகத்திடம் கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.