கிழக்கில் 10,000 ஆதரவற்ற குடும்பங்களுக்கு 1 மில்லியன் யுவான் பெறுமதியான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு சீனாவின் யுனான் மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது தூதுவர் Qi Zhenhong இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகளில் சீன முதலீட்டை எதிர்பார்ப்பதாக ஆளுநர் அழைப்பும் விடுத்துள்ளார்.
முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களுக்கு அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.