நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேநேரம், கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்தவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.