கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மைனா கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது.
இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கு இடையூறு எற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் அவர்களின் முறைப்பாட்டை ஏற்க உரிய அதிகாரி இல்லையென பொலிஸார் தெரிவித்திருந்ததாகவும் குறித்த பகுதியில் இன்று காலை பதற்றமான சூழல் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.