திடீரென ஏற்படும் ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
எனினும், இதுவரை பிரித்தானியாவில் இதுதொடர்பான எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இறந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், அது எங்கு ஏற்பட்டது என்று கூறவில்லை.
கல்லீரல் அழற்சியின் பெரும்பாலானவை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இருந்தன. இருப்பினும் 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிலும் சிறிய எண்ணிக்கையிலானோருக்கு தற்போது பரிசோதிக்கப்படுகின்றன.
உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகளில், 81பேர் இங்கிலாந்திலும், 14 பேர் ஸ்கொட்லாந்திலும், 11பேர் வேல்ஸிலும், ஐந்து பேர் வடக்கு அயர்லாந்திலும் உள்ளனர்.