நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அரசாங்கம் இழந்துவிட்டதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் போதே இரு தரப்பினரினதும் பலம் குறித்து தெரியவரும் என அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
தமக்குத் தெரிந்தவரை 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செய்யப்படுவதாக அறிவிக்கவில்லை என கூறினார்.
அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 உறுப்பினர்களின் ஆதரவு கூறியிருந்தார்.