இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளத்தில், ” கொரோனா தடுப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.