அரசு சாரா அமைப்புகளின் நிதியைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பல புதிய நிபந்தனைகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2020 இன் விதிகளின் திருத்தங்கள்; அரசியலமைப்புக்கு உட்பட்டுள்ளதால் அது செல்லுபடியாகும் என இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
‘திருத்தப்பட்ட விதியானது வெளிநாட்டு பங்களிப்பு வருவதை முற்றிலுமாக தடைசெய்வதாக இல்லை. பதிவு செய்யப்பட்ட நபர்கள் அல்லது முன் அனுமதி பெற்ற நபர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கையாகும். வரம்புகளுக்குள் நிர்வாகச் செலவுகள் உட்பட முழு பங்களிப்பையும் அவர்களே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் காணப்படுகின்றது’ என நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
வெளிநாட்டு பங்களிப்பால் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு கோட்பாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் கருத்திற்கொண்டிருந்தது.
ஏனெனில், வெளிநாட்டு பங்களிப்பு சமூக-விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார அமைப்பு மற்றும் அரசியல் ஆகியவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக, வெளிநாட்டு உதவியானது வெளிநாட்டு பங்களிப்பாளரின் இருப்பை உருவாக்கலாம், நாட்டின் கொள்கைகளை பாதிக்கலாம். தமது விடயங்களை அரசியல் சித்தாந்தத்தில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது திணிக்கவோ முனையலாம்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நாட்டின் அரசியலமைப்பு ஒழுக்க கோட்பாட்டுடன் வெளிநாட்டு பங்களிப்பின் விரிவாக்கம், நாட்டில் வெளிநாட்டு பங்களிப்பின் இருப்பு அல்லது வரவு முற்றிலும் தவிர்க்கப்படாவிட்டாலும் குறைந்த மட்டத்தில் இருக்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம் கூறியது.
அத்துடன், வெளிநாட்டுப் பங்களிப்புக்கள், சமூக ஒழுங்கை சீர்குலைப்பது உட்பட பல்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தலாம். ஆகவே நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பங்களிப்புகள் காரணமாக வெளிநாடுகளின் செல்வாக்கைத் தவிர்ப்பதற்காக நாட்டிற்குள் இருக்கும் நன்கொடையாளர்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்தியாவில் நன்கொடையாளர்களுக்க பஞ்சமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
வெளிநாட்டுப்பங்களிப்புக்கள் குறித்துரைக்கும் 1976 ஆம் ஆண்டு சட்டம் 2010 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் இரத்து செய்யப்பட்டது, ஏனெனில் வெளிநாட்டு பங்களிப்பு என்ற பெயரில், நேர்மையற்ற நிறுவனங்கள் இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட அனுபவத்தின் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இவ்வாறான பின்னணியில் வெளிநாட்டுப்பங்களிப்புக்கள் குறித்துள்ள சட்டமியற்றும் நோக்கமும், அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான முயற்சியும் வெளிநாட்டினரை ஊக்கப்படுத்துவதாகும்.
வெளிநாட்டு பங்களிப்பு குறித்து அரசியலமைப்பில் பொதுவாக, சட்டத்தின் பிரிவு 11 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட திட்டவட்டமான நோக்கங்களுக்காக வெளிநாட்டுப் பங்களிப்பைப் அனுமதிக்கவும் பெறும் அல்லது ஏற்றுக்கொள்ளும் நபர், சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழைப் பெற வேண்டும் அல்லது முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
132 பக்கங்கள் கொண்ட தனது உத்தரவில், அதில் முழுமையான உரிமை இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
‘2020 சட்டத்தின்படி திருத்தப்பட்ட விதிகள், அதாவது, 2010 சட்டத்தின் பிரிவுகள் 7, 12(1 A), 12 A மற்றும் 17 ஆகியவை, இதுவரை குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பு மற்றும் முதன்மைச் சட்டத்தின் உட்பிரிவுகள் (சட்ட அதிகாரத்திற்குள்) என்று அறிவிக்கிறோம்.
பிரிவு 12A ஐப் பொறுத்தவரையில், இந்தியப் பிரஜைகளான விண்ணப்பதாரரின் (சங்கங்கள்/என்ஜிஓக்கள்) முக்கியப் பணியாளர்கள அல்லது அலுவலகர்கள், அவர்களின் அடையாள நோக்கத்திற்காக இந்திய கடவுச்சீட்டை பெறுவதற்கு அனுமதிப்பதாகக் கூறப்பட்ட விதியைப் படித்து, அதை நாங்கள் புரிந்துகொண்டோம். அடையாளம் காண்பது தொடர்பான பிரிவு 12A இல் உள்ள ஆணையின் கணிசமான இணக்கமாக கருதப்படும்’ என்றும் நீதிமன்றம் கூறியது.
2010 மற்றும் 2019 க்கு இடையில் வெளிநாட்டு பங்களிப்புகளின் வரத்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட பல சங்கங்கள் பதிவுச் சான்றிதழ்களை இரத்து செய்ய வேண்டிய அடிப்படை சட்ட விதிகளுக்கு இணங்கத் தவறியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குறித்த காலப்பகுதியில், 19,000இக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் காணப்படுகின்றது. மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக மாநில மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொள்கின்றபோது தற்போதைய திருத்தம் அவசியமானது,’ என்றும் நீதிமன்றம் கூறியது.
வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட முறையில் அதை ஏற்றுக்கொள்வது மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது அனுமதியில் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல், உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழைப் பெற விரும்புவோர், அதன் முக்கியப் பணியாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அடையாள ஆவணத்தை அளிக்கத் தேவையில்லை’ என்று நீதிமன்றம் கூறியது.
எனினும், வெளிநாட்டவரின் கடவுச்சீட்டு போதுமான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதால், அதே நோக்கத்திற்காக இந்திய நாட்டவரின் கடவுச்சீட்டை நம்ப முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை’ என்றும் நீதிமன்றம் கூறியது.
‘குறித்த சட்டம் தொடர்பாக புரிந்து கொள்ளப்பட்ட நிலையில். விண்ணப்பதாரரின் முக்கியப் பணியாளர்களின் இந்தியக் கடவுச்சீட்டை வழங்குவதை அனுமதிப்பதாக இந்த விதிமுறை கருதப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்திய குடிமக்கள், அவர்களின் அடையாள நோக்கத்திற்காக கடவுச்சீட்டைப் பயன்படுத்துகின்றார்கள்’ என்றும் நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, வெளிநாட்டு பங்களிப்புக்கள் தொடர்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் மனுத் தாக்கல் செய்யப்பட்டது, இது வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2020, 2020 இன் படி, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் விதிகளுக்கான திருத்தங்கள் அரசியலமைப்புக்குட்பட்டவாறு செல்லுபடியாகும்.
எனினும், புதிய விதிகள் வெளிப்படையாக தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21ஆவது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பாதிக்கிறது என்று மனுதாரர் கூறினார்.
மற்றொரு மனு, 17(1) மற்றும் 12(1A) ஆகிய பிரிவுகளின் செல்லுபடியாகும் தன்மையை சவால் செய்துள்ளது, ஏனெனில் அது வெளிப்படையான நியாயமற்ற தன்மை, தெளிவின்மை, அதிக அகலம் மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
முன் அனுமதி உள்ளிட்ட 2010 ஆம் ஆண்டு சட்டத்தில் முன்வைக்கப்பட்ட அளவுருக்களுடன் இணங்கினால், எந்தவொரு நபரும் வெளிநாட்டு பங்களிப்பில் பரிவர்த்தனை செய்ய இந்தத் திருத்தம் தடையாக இருக்காது.
நிறைவேற்று அதிகாரத்தின் கடந்த கால அனுபவத்தின் காரணமாக இந்த திருத்தங்கள் அவசியமானவை மற்றும் சட்டமியற்றும் அறிவுக்கு உட்பட்டது. திருத்தங்கள் பயனுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் உள்ளன
வெளிநாட்டு நிதியின் வரவு மற்றும் பயன்பாடு குறித்து. இவை ஒரே மாதிரியாகப் பொருந்தும் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து வெளிநாட்டு பங்களிப்பைப் பெறும் எந்த அரசு சாரா அமைப்பு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பாகுபாடு காட்டாது. அரசியலமைப்பின் திருத்தங்கள், அடிப்படை உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.