ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகிய இந்த பேரணி 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பேரணி இன்று கலிகமுவவில் இருந்து தங்கோவிட்ட நோக்கி பயணிக்கவுள்ளது. அத்தோடு, இந்தப் பேரணி எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
கண்டியிலிருந்து நேற்று முன்தினம் (26) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியில் அதிகளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.