அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.
நான்கு தனித்தனியான எதிர்ப்பு பேரணிகள் குருநாகல் நகரை வந்தடைந்து பின்னர் அருகில் அமைந்துள்ள Gota Go Home கிளைக்குச் சென்றன.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மருத்துவத் துறையின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையில் சவப்பெட்டி, சக்கர நாற்காலியை தூக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை உடனடியாக இராஜினாமா செய்யக்கோரி நூற்றுக்கணக்கான அரச மற்றும் தனியார் துறையினர் நாடளாவிய ரீதியில் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.