போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார்.
அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது மிக முக்கியமானது என பைடன் கூறினார். இது உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவில் 20 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி, 8.5 பில்லியன் டொலர்கள் பொருளாதார உதவி மற்றும் 3 பில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி ஆகியவை அடங்கும்.
இது மலிவானது அல்ல என கூறிய பைடன், ஆக்கிரமிப்புக்கு தாம் அனுமதித்தால் அது அதிக செலவாகும் என சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்கு உதவி அறிவித்திருந்தாலும், இந்த திட்டங்கள் கணிசமான அளவு உதவியை அதிகரிக்கின்றன.