பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதனால் தமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் ஆளும்தரப்பு பெரும்பான்மை யை இழந்த நிலையில், இன்று விசேட உரையாற்றி பிரதமர் பதவி விலகவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இருப்பினும் தனது இராஜினாமாவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்போவதில்லை என்றும் ஆனால் பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை வெளியேறுமாறு கோரினால், பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில், நேற்று அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்து.
இந்நிலையில் இன்று ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.