ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும் என, அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா, அல்லது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.