போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே அந்தப்ப பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் அதில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்ககொண்டுள்ளார்.