தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான பின்னணியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.