எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார்.
சிலர் குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானா போலியான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாறக்கூடாது எனவும் நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறானவர்களின் முயற்சிகளை மக்கள் ஒன்றிணைந்து தற்போது முறியடித்துள்ளார்கள் எனவும் நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார்.














