நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.