வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விசேட அறிக்கையொன்iற வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் வெற்றிபெற இளைஞர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், இலங்கையர்கள், அதாவது, எங்கள் மக்கள், எனவே அவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.
எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அன்பானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் வன்முறையிலான செயற்பாட்டை நிறுத்துங்கள்.
இல்லையெனில் நம் நாட்டில் உள்ள சக குடிமக்களில் ஒரு பகுதியைக் கொன்று, நசுக்கி, எரித்து, அழித்துவிடலாம். இவ்வாறு செயல்பட்டால் அதாவது சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட கடமைப்பட்டுள்ள நாம் அதாவது எம்மிடமிருந்து சட்டத்தை நீங்கள் கையில் எடுத்தால் எமது நாட்டுக்கு எதிர்காலம் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.