உக்ரேனிய நகரமான இஸியம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒழிந்திருந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
மீட்பு பணியாளர்களினால் கட்டிடத்தை மட்டுமே அடைய முடிந்தது என உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதே தெருவில் உள்ள மற்றொரு கட்டிடமும் குறிவைக்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் திகதி இஸியம் பகுதியை கைப்பற்றிய ரஷ்யாவின் துருப்புக்கள் நகரத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளன.