அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த கைகலப்பில் அவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தாங்கள் எப்போதும் சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகவும், எந்தவொரு வன்முறையையும் மன்னிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து இலங்கையர்களிடையே நிலையான அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் இரண்டு பாதிரியார்களும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.















