உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு நாடுகளுக்குள்ளும் விவாதம் நடந்து வரும் நிலையில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது.
புதன்கிழமை செல்லும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஐரோப்பாவின் பதில் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.