பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய பிரதமரின் அழைப்பை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று விரிவான பேச்சு நடத்தியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.