ஐ.பி.எல். ரி-20 தொடரின் 60ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிவிங்ஸ்டன் 70 ஓட்டங்களையும் ஜோனி பேயர்ஸ்டொவ் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஷபாஸ் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 35 ஓட்டங்களையும் ராஜட் படிதார் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் ரிஷி தவான் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹர்பீரிட் பிரார் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோனி பேயர்ஸ்டொவ் தெரிவுசெய்யப்பட்டார்.