எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்று டீசல் சரக்கு கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 2 வாரங்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவிருக்கும் நிலையில், போதுமான எரிபொருள் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
எனவே, 1,190 எரிபொருள் நிலையங்களில் விநியோகம் முடியும் வரை அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது சேமிப்பதற்காக எரிபொருளை நிரப்பவோ வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
With the arrival of the Diesel cargo yesterday and 3 vessels to reach SL in the next 2 weeks on the @IndiainSL credit line, adequate fuel will be made available. Request the public not to queue up or top up the next 3 days until the 1190 fuel station deliveries are completed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 16, 2022