இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், முஷ்பிகுர் ரஹீம் 53 ஓட்டங்களுடனும் லிடொன் தாஸ் 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷ் அணி 79 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
சட்டோகிராம் மைதானத்தில் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 199 ஓட்டங்களையும் சந்திமால் 66 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நயீம் 6 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள பங்களாதேஷ் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை பங்களாதேஷ் அணி நாளை தொடரவுள்ளது.