மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையைவிட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பொதுமக்களின் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்துகொண்டாலும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. பொதுமக்களுக்கு தற்போது வழங்கப்படும் சந்தை விலையை விட, யாருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
ஆம்புலன்ஸ் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு யாருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் வழங்கப்படாது” என பதிவிட்டுள்ளார்.
(1) While I do understand the frustration and anger from the public, posts shared on MPs been given subsidized fuel rates is false. No MP from either side or anyone has been given subsidized rates than the current market prices given to the public.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 19, 2022