மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் இன்று (வியாக்கிழமை) ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி இந்தப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றம் கனடாவாகும்” என தெரிவித்துள்ளார்.
Today, the Canadian parliament unanimously passed a motion to recognize May 18th as Tamil Genocide Remembrance Day.
On this very important day, Canada becomes the first national parliament in the world to recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day. pic.twitter.com/tfkwD2eAZl
— Gary Anandasangaree (@gary_srp) May 18, 2022