உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
தங்கள் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த லிசிசான்ஸ்க் மற்றும் செவரோடொனட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளனர்.
இதுதவிர, ஒட்டுமொத்த டான்பாஸ் பிரதேசத்தில் ரஷ்யா படையினர் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதுடன், தாக்குதலின் தீவிரத்தையும் அதிகரித்துள்ளனர்.
டான்பாஸின் டொனட்ஸ்க் நகரைச் சுற்றிலும் உள்ள உக்ரைன் இராணுவ அரணை உடைக்கும் நோக்கில், சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.