இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் இரத்து செய்யப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.
21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பசில் ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமையும் நீக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.