சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதி காணாமல்போயுள்ள நிலையில், வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கை தொடர்பில் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
எனவே ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமானது என சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்