உக்ரைனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற முதல் போர் குற்ற விசாரணை இதுவாகும்.
தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய கமாண்டர் வாதிம் ஷிஷிமரின், உக்ரைனின் வட கிழக்கு பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற 62 வயது முதியவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
வாதிம் முதியவரை சுட்டதை ஒப்புக் கொண்டாலும், தான் ஆணைக்கு இணங்க செயற்பட்டதாக தெரிவித்தார். மேலும், தன்னால் கொலை செய்யப்பட்ட முதியவரின் மனைவியிடம் வாதிம் மன்னிப்பு கேட்டார்.
உக்ரைனில் மேலும் பல போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. குடிமக்களுக்கு எதிராக 11 ஆயிரம் குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.