இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார்.
பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார்.
அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார்.
அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் சீனா சேர்க்கப்படவில்லை. சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை எதிராகவே இந்த கட்டமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கிடையே விநியோகச் சங்கிலி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவை சார்ந்து இந்த கட்டமைப்பு செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.