வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில், ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.















