நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலே அவர் நீதிமன்றில் ஆஜரானார்.
இந்த முறைப்பாடு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வழக்கை எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரக்பி விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முறைப்பாடு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நிதிமோசடி விசாரணை பிரிவால் 2016 ஆம் ஆண்டு ஆடி மாதம் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.