கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், மார்கழி மாதத்திற்குள் நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என தெரிவித்தார்.
பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் முடித்தல், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துதல், பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுதல், பாடப்புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தாள் தட்டுப்பாடு காரணமாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.