வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட ஒன்பது முந்தைய தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ரஷ்யாவும் சீனாவும், தற்போது பொருளாதாhரத் தடை தீர்மானத்தை எதிர்த்து முதல்முறையாக வாக்களித்துள்ளன.
15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக 13-2 ஆக இருந்தது. ஆனால், ரஷ்யாவும் சீனாவும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை அமைப்புகளை உருவாக்கும் வடகொரியாவின் திட்டத்தை ஆபத்தானது, ஏமாற்றமளிக்கும் மற்றும் எரியூட்டக்கூடியது என்று கூறினார்.
இந்த ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பிறகு வட கொரியா மீது இந்த நடவடிக்கை வந்துள்ளது. இவை அனைத்தும் முந்தைய ஐநா தீர்மானங்களை மீறியது மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றொரு சர்வதேச பதிலைத் தேவை என்று வாதிட்டனர்.