உக்ரைனின் பெரிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் வெளியேறலாம் என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் நகரத்தின் ஒரு பகுதி சுற்றியுள்ளதால், உக்ரைன் துருப்புக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளப்படாமல் இருக்க வெளியேற வேண்டியிருக்கும் என லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார்.
கிழக்கு டோன்பாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா ஒரு முக்கிய போர் நோக்கமாகக் கொண்டுள்ளது
ரஷ்யாவின் முன்னேற்றத்தை எதிர்க்க நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை அதை வழங்கவில்லை.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைனுக்கு நீண்ட தூர பல-ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள் தேவை என்று கூறினார்.
இதனிடையே, உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று உக்ரைன் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது.
துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் தரை மட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளின் அடியில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.