இந்தியாவின் பந்திபோராவைச் சேர்ந்த பன்முகத் திறன் கொண்ட இளம் பெண், முரண்பாடுகள் இருந்தபோதிலும், படிப்பு, விளையாட்டு மற்றும் சமூகம் என வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
18 வயதுடைய நஸ்ரானா அஹ்சன் வானி, எழுத்தாளர், தடகள வீராங்கனை மற்றும் தூதுவர் என்று அடையாளப்படுத்தப்படுகின்றார்.
அறிவியல் பாடத்தில் தனது கல்வியைத் தொடர்வதைத் தவிர, பள்ளி நாட்களிலிருந்தே எழுதி வரும் எழுத்தின் மீது எல்லையற்ற காதல் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
அவர் 9ஆம் வகுப்பில் கற்கும்போது எழுதத்தொடங்கியதோடு இதுவரை 30 இற்கும் மேற்பட்ட தொகுப்புகளை எழுதியுள்ளார், அதில் ‘உலக சாதனை புத்தகமும் உள்ளடங்குகிறது.
அத்துடன், அவர் சிறந்த எழுத்தாளருக்கான லைம்லைட் விருது பெற்றவராக இருப்பதோடு 2021ஆம் ஆண்டின் சிறந்த இளைஞர் ஐகான் பிரிவில் திறமையான விருதையும், வில்லியம் ஷேக்ஸ்பியர் இலக்கிய விருதையும், ஜம்மு-காஷ்மீரின் 2021ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய சிலை விருதையும் பெற்றுள்ளார்.
அத்துடன் பேனா ப்ளேயர் விருது பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சாகித்ய ஸ்பெக்ட்ரம் விருது, ஹிந்துஸ்தான் எழுத்தாளர் விருது, இந்தியப் பள்ளி விருதுகள், இலட்சிய விருது, க்ளான்டர் எக்ஸ் வுமன் லீடர் விருது, இந்தியப் பதிவுகள் புத்தகம், பொக்ஸ் க்ளூஸ் இந்தியா பிரைம் விருதுகள், இந்தியாவின் சிறந்த 100 ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்’, 2021ஆம் ஆண்டின் ஆசிரியர் ஸ்டோரி மிரர், இந்திய நோபல் விருது, தி பெமினா விருதுகள் 2022 என்பன அவற்றுள் முக்கியமானவையாகும்.
எழுதுவது மட்டுமல்ல, அவர் தற்காப்புக் கலைகளில் இரண்டு முறை தேசிய பதக்கம் வென்றவர் என்பதோடு தடகளப் போட்டிகளில் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் தற்காப்புக் கலையின் ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இதேநேரம், அவர் ஐக்கிய நாடுகள் சபையில் அதிகாரப்பூர்வ வளாகத் தூதுவராகப் பணிபுரிகிறார்.
அவ்விதமானவர், ‘இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பது எனது குடும்பத்தினரின் ஆதரவால் தான், அத்துடன் னது பயிற்சியாளர் ஜம்ஷீதா யூசுப்பும் அதற்கு முக்கியமானவர்’ என்று அவர் உறுதிப்படுத்துகிறார்.
இதேநேரம், அவரது ‘நிழலற்ற மாலை’ என்று பொருள்படும் 80 பக்க புத்தகத்தை லண்டனை தளமாகக் கொண்ட சுதந்திர வெளியீட்டு தளமான ‘நேஷன் பிரஸ்’ வெளியிட்டுள்ளது. அப்புத்தகம், மனித இயல்பு மற்றும் படைப்பு மனம், மனதின் திறன் மற்றும் ஆன்மாவின் ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய கவிதைகளின் தொகுப்பாகும்.