தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு சட்ட கட்டமைப்பிற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு தலையிடுவது என்பது குறித்து இதன்போது ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.