சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதி நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 500 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு வரவுள்ளது.
அவற்றில் 256,320 உயிர்காக்கும் கருவிகள் மற்றும் 10 மில்லியன் சீன யுவான் பெறுமதியான ஊசிகளும் உள்ளன.
இரண்டாவது தொகுதி இந்த மாத நடுப்பகுதியில் நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு சரக்குகளும் இலங்கையில் ஆறு மாத கால பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.