மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் தொகுதி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
எம்.270 பல ஏவுகணை ரொக்கெட் அமைப்பு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என அவர் கூறினார்.
ஆனால், எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை பிரித்தானியா அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அது ஆரம்பத்தில் மூன்றாக இருக்கும் என கூறப்படுகின்றது.
அமெரிக்காவுடன் உறுதியளிப்புக்கு பின்னதாக, கடந்த வாரம் ரொக்கெட் அமைப்பை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்கனவே ரஷ்யா கோபப்படுத்தியுள்ளது மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பினால், உக்ரைனில் ரஷ்யா தாக்கும் இலக்குகளின் பட்டியலை விரிவுபடுத்துவதாக அச்சுறுத்தினார்.
எதிர்வரும் வாரங்களில் லொஞ்சர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உக்ரைன் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.