ரஸ்யாவின் ஏரோஃப்ளொட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள் ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிறுவனம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானத்தை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.