அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை என்ற செய்திகளில் உண்மையில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசியின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் அல்லது இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும் மே மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 220க்கும், சம்பா 230க்கும், கீரி சம்பா 260க்கும் விற்பனை செய்யப்படும்.
எவ்வாறாயினும் அரிசி விலையை திருத்தவோ அல்லது அதிகரிக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு 500,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.