உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சில நாடுகள் பெரும் மந்தநிலையை எதிர்கொள்வதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
1970 க்குப் பின்னர் உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பால் ஏற்பட்ட மந்த நிலையில், அதிக பணவீக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சியே இதற்கு காரணம் என கூறியுள்ளது,
இவற்றில் இருந்து மீண்டும் வரக்கூடிய உண்மையான ஆபத்து இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
வங்கியின் புதிய உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பு – 2.9% – 80 ஆண்டுகளில் மிகக் கடுமையான வீழ்ச்சியைக் குறிக்கிறது.