ஜேர்மனி பெர்லினில் கார் ஒன்று பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி சுமார் 10:30 மணியளவில் (08:30 GMT) நடந்த சம்பவம் வேண்டுமென்றே நடந்ததா அல்லது விபத்தா என்பது குறித்து அதிகாரிகள் அறிவிக்கவில்லை.
மேற்கு பெர்லினில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாகனம் வீதியை விட்டு விலகி நடைபாதையில் ஏறி கடையின் முன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.