நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்று எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
3,900 தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு நாட்டை வந்தடைந்த கப்பலின் எரிவாயு இருப்புக்களை இறக்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.