மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, மின்சாரத் திருத்தச் சட்டமூலம் 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.