உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளாக வரவேற்க வேண்டுமா என்பதை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த மாத இறுதியில் முடிவு செய்ய உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்று முன்னாள் சோவியத் குடியரசுகளை போரின் முதல் வாரங்களில் அவசரகால விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தூண்டியது.
உக்ரைனின் வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. மேலும் மால்டோவாவுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கடுமையாக முயற்சிக்கின்றது.
அரசியல் சீர்திருத்தங்கள் முதல் தடையற்ற வர்த்தகம் வரை அனைத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பதற்காக மூன்று நாடுகளும் அசோசியேஷன் ட்ரையோ என்று அழைக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது புவிசார் அரசியல் தேவையாகிவிட்டது என்று உக்ரைன் வாதிடுகின்றது.