அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையும் எனவும், பாதகமாக அமையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர்கள் முன்னர் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மே 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இது குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
2020 அல்லது 2021 இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்தால், தற்போது கடனை செலுத்தவேண்டிய தேவை இருக்காது என்றும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.